ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ள இரண்டு சூப்பரான ரீசார்ஜ் பிளான்கள்! சிறப்பம்சங்கள் என்ன?
Jio Latest Recharge Plans: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Jio தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் நாளுக்கு நாள் ஜியோ சிம்மை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஓரிரு மாதங்களுக்கு முன்பாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தினர். இதன் காரணமாக மக்கள் பெரிதும் வருந்தினர். ஆனாலும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள மாதமாதம் ஏதாவது ஒரு சலுகைகளை கொண்டு வந்து தான் இருக்கிறது.
அந்த வகையில் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகை ரீசார்ஜ் திட்டத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ரூபாய் 75 ரீசார்ஜ் திட்டம்
ஜியோ நிறுவனம் ஆனது தனது வாடிக்கையாளர்களை தவிர தற்போது ரூபாய் 75 ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த ரீசெட் திட்டமானது 23 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் செலவாகும்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 23 நாட்கள் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி நம் பெற்று மகிழலாம். இதனுடன் 2.5 ஜிபி இன்டர்நெட் டேட்டா வசதியும் 23 நாட்களுக்கு கிடைக்கும். கூடுதலாக 200 எம் பி டேட்டாவும் ஒரு முறை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஜியோ சினிமா ஜியோ டிவி ஜியோ கிளவுட் போன்ற சேவைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் இதில் கிடைத்துள்ளது. இது குறைந்த ரீசார்ஜ் பிளானை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறந்ததாக அமையும்.
ரூபாய் 449 ரீசார்ஜ் பிளான்
இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதிவேக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த திட்டமாக அமையும்.
ஒரு நாளைக்கு 3ஜிபி விதம் ஒரு மாதத்திற்கு டேட்டா ப்ளான் இதில் கிடைக்கும். வரம்பற்ற கால் செய்யும் வசதி ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி போன்றவை இந்த திட்டத்தில் கிடைக்கக்கூடும்.
அதுமட்டுமில்லாமல் ஜியோ டிவி ஜியோ கிளவுட் போன்ற வசதிகளையும் நீங்கள் இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு திட்டத்தையும் பயன்படுத்தி மகிழலாம். குறைந்த ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பவர்களுக்கு ரூபாய் 75 திட்டமும் அதிக இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்பவர்களுக்கு ரூபாய் 449 திட்டமும் சிறந்ததாக இருக்கும். மீண்டும் ஒரு நல்ல பதிவில் சந்திக்கலாம் நன்றி.