முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
இதனிடையே, ரூ.1000உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள குடும்ப தலைவிகளுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதன்படி மேல்முறையீடு செய்தவர்களில் 1 லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகுதிக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களில் மேல்முறையீடு செய்யலாம் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்த பின் 30 நாட்களுக்குள் இ சேவை மையம் விண்ணப்பம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.