தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான விண்ணபங்களை வழங்கும் சிறப்பு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் மூலம் இதுவரை சுமார் 1.63 கோடி பெண்கள் இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணபங்கள் நாளை(ஆகஸ்ட் 24) முதல் சரிபார்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்க்கும் பணியில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் ரூ. 1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை அல்லது சந்தேகப்படும்படியாக இருந்தால் அதிகாரிகள் வீட்டிற்கு ஆய்வு மேற்கொள்ள வருவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணபங்களை சரிபார்க்கும் பணியானது வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் விண்ணபங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான குடும்பத் தலைவிகளின் இறுதி பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.