மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தில் நூலகர் மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க
Librarian Cum Caretaker Job: வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் நாம் அரசு அலுவலகங்களில் வெளியாகியுள்ள நூலகப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி பார்க்க உள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் செய்தி தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வல்லநாடு வீரன், வெள்ளையன் தேவன் மணிமண்டபம், கவர்னகிரி வீரன் சுந்தரலிங்க மணிமண்டபம், கட்டங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்தப் பணியிடங்களை பற்றிய மொத்த விவரங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் இதனை தெளிவாக படித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணியிட விவரங்கள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்களில் 3 நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வித்தகுதி
இந்த நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நூலகருக்கான Certificate in Library and Information Science (CLIS) படிப்பின் சான்றிதையும் பெற்றிருக்க வேண்டும்.
வயது விவரங்கள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 34 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வயது சார்ந்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.
சம்பள விவரங்கள்
இந்த நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 7,700 முதல் 24,200 வரை சம்பளம் கிடைக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
மக்கள் செய்தி தொடர்பு நிறுவனகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.
தேர்வு முறை
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தூத்துக்குடி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு இணையதள பக்கமான https://thoothukudi.nic.in/சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து அதனை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
தூத்துக்குடி மாவட்டம் – 628101
முக்கிய இணைப்புகள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 01 அக்டோபர் 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18 அக்டோபர் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply