மகளீர் உரிமைத்தொகை திட்டம் – பெண்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!
Magalir Urimai Thogai Happy News: பெண்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்கள் சுயதொழில் மூலம் தன் நிலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு மகளிர் சுய உதவி குழு மூலமாக லோன் வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கு மிகக் குறைந்த அளவு வட்டி மற்றும் அதிக மானியம் கிடைக்கிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை 20 இலட்சம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக தரமான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 இலட்சத்து 25 ஆயிரம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 இலட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தமிழக அரசானது மகளிர் உரிமைத் தொகையை பெண்களுக்கு மாதமாதம் ரூபாய் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதன் மூலம் பெண்கள் ஆண்களை நம்பி இருக்காமல் தன் குடும்பத் தேவைகளை இந்த பணத்தின் மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த மகளிர் உரிமைத் தொகையை பெரும்பாலான மகளிர் வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர் அப்படி சேமித்து வைக்கும் போது அந்த மகளிர் உரிமை தொகையின் வட்டி வீதமானது அதிகரிக்கிறது. இதன் காரணமாக மகளிர் உரிமைத் தொகையினை பெறும் மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்: