தமிழகத்தில் நீட் தேர்வு நிச்சயமாக நீக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!
பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் நீட் தேர்வு தமிழகத்தில் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவிற்கு பிறகு பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளியான நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று தொடர்ச்சியாக இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாய் பேசப்பட்டு வருகிறது.
மேலும், இந்த மாணவர் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில், மாணவர்களின் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வினை நிச்சயமாக நீக்க வேண்டும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், நீட் தேர்வை முழுமையாக தமிழகத்தில் நீக்கும்படியான சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.