தற்பொழுது உள்ள இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பலரும் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறைக்கு மாறி வருகின்றனர். இந்த ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. முன்னதாக பெரிய கடைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆன்லைன் பரிவர்த்தனை தற்பொழுது கிராமப்புறங்களில் இருக்கும் கடைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், UPI மூலம் செயல்படுத்தப்படும் இந்த ஆன்லைன் பரிவர்த்தனை தொடர்பாக தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, SBI மற்றும் ICICI வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் sbi மற்றும் icici வங்கி rupay கிரெடிட் கார்டுகளுடன் யுபிஐ பரிவர்த்தனை பெரும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களின் கிரெடிட் கார்டை யுபிஐ யுடன் இணைக்க வேண்டும். மேலும், இந்த புதிய அம்சமானது BHIM எனப்படும் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்திய இந்த புதிய வசதியின் மூலம் ஆன்லைன் பண பரிவர்த்தனையை பெற வாடிக்கையாளர்கள் முதலில் SBI மற்றும் ICICI வங்கியின் Rupay கிரெடிட் கார்டுகளை BHIM என்றசெயலியில் இணைக்க வேண்டும். அதன்பின், merchant UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் பணம் செலுத்திக் கொள்ள முடியும். இந்த BHIM செயலி 11 வங்கிகளின் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைக்க அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.