புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் – மத்திய அரசு அறிவிப்பு! முழு விவரங்களை பார்க்க
New Pension Scheme: அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் மக்கள் அனைவரும் ஒரு நிலையான வேலை வாய்ப்பு பெறவே விரும்புகின்றனர். ஏனென்றால் ஒரு நிலையான வேலை வாய்ப்பு பெறுவதன் மூலமாக அவர்கள் எந்தவித பயம் இன்றி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த இயலும். இதன் காரணமாக அனைவரும் அரசு வேலை பெற முயற்சிக்கின்றனர்.
அரசு வேலை பெறுவதற்கான முதன்மை காரணம் தான் பணி செய்து முடித்ததும் அவர்களுக்கு ரிட்டயர் ஆன காலத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். இந்த ஓய்வூதியத்தின் மூலம் அவர்கள் தங்கள் மீதும் உள்ள காலத்தை நடத்த அது பெரும் உதவி புரியும். அவர்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
எனவே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பெரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் காரணமாக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளது அதைப்பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
ஓய்வூதிய திட்டம்
பிரதமர் அவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு குழு இணைந்து தற்போது ஒரு சிறப்பான முடிவை எடுத்துள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு வழங்கிட முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வு பெற்றபின் தங்கள் வருவாயில் 50% பணத்தை ஓய்வூதியமாக பெறுவர்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
மத்திய அரசு ஆனது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்பு ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வு ஊதியமாக பெறுவர். அதன் விவரங்களை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஒரு மத்திய அரசு ஊழியர் ஆனவர் 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றால் அவர் கடைசியாக 12 மாதத்தில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் சராசரியாக 50% ஓய்வூதியமாக அவர் ஓய்வு பெற்ற காலத்திற்குப் பின் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறும் ஒரு மத்திய அரசு ஊழியர் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு அவர் பெற்ற ஓய்வு விதத்தில் இருந்து 60% ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு ஆனது தெரிவித்துள்ளது.
ஒருவர் 10 ஆண்டுகாலம் அரசு பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்று இருந்தால் அவருக்கு ரூபாய் பத்தாயிரம் மாத மாதம் ஓய்வூதியமாக கிடைக்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பணியில் பணியாற்றுபவர் NPL, UPL இந்த ரெண்டு ஓய்வூதிய திட்டத்தில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அவர் இணைந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
எப்போது நடைமுறைக்கு வர உள்ளது
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமானது ஏப்ரல் 1 2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு ஆனது தெரிவித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே பென்ஷன் திட்டத்தை எதிர்பார்த்த மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் சம்பளமாக பெற்ற தொகையில் 50 சதவீதம் ஓய்வூதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கொண்டு வந்ததன் மூலம் ஒரு நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.