உணவக பாதுகாப்புத்துறையானது கடந்த 2 மாதங்களில் சுமார் 2,872 இடங்களில் செயல்பட்டு வந்த உணவகங்களை சோதனை செய்தது. இவற்றில் தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை மாநகரில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகின்றன .
இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 658 உணவகங்களளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், உணவகம் இல்லாத கடைகளான பேக்கரி, டீக்கடை உள்ளிட்ட 813 கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 44 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், உணவக விதிகளின்படி இயங்காத அல்லது புகாருக்குள்ளான 68 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.