இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் வாகனங்களை தான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு வாகனங்கள் மக்களோடு ஒன்றியதாக மாறிவிட்டது. ஒரு குடும்பத்தில் சொந்த வீடு இருக்கோ இல்லையோ சொந்த கார் அல்லது பைக் வைத்துள்ளனர்.
இந்நிலையில், வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வபோது வாகனங்களில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், டெஸ்லா நிறுவனம் ஓட்டுநர்கள் இல்லா வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான கடைசி கட்ட பணிகளும் நிறைவடைந்து அதற்கான டெஸ்ட்டும் நடத்தப்பட்டது.
இந்நிறுவனம் பெங்களூரில் இந்த டெஸ்டை நடத்தியது. அதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் டிரைவர் இல்லாமல் நான்கு சக்கர வாகனம் இயங்குவதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கும் காட்சி வைரலாகி வருகிறது.