தமிழகத்தில் இனி கரண்ட் கட்டே ஆகாதாம்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!
தமிழகம் முழுவதும் மின்வாரியத்தின் மூலமாகத்தான் வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்திற்கும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில், வீடுகளுக்கு 100 யூனிட் மின்சராமும் விவசாயத்திற்கு முழுவதும் இலவச மின்சாரத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த இலவச மின்சாரம் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். நாம் பயன்படுத்தும் மின்சாரமானது காற்றலைகள், நீரின் சுழற்சி திறன் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் என்பார்கள். ஏனென்றால், இந்த சீசனில் தான் அதிக காற்றும் வீசக்கூடும். இதனால் மின் உற்பத்தியும் அதிக அளவில் இருக்கும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி முதல், 15 நாட்கள் தினமும் சராசரியாக, 10 கோடி...