தமிழகத்தில் சுமார் 30000 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் சுமார் 30000 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா இன்று (ஜூன் 27) நடைபெற்ற நிலையில், சுமார் 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதல்வர் அறிவிப்பு: தமிழகத்தில் சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக சிறப்பான முறையில் இன்று (ஜூன் 27) நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலைநாட்டிடும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம், புதிய திட்டமான “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்” கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட...