the-myths-and-facts-surrounding-the-famous-tirupattur-pappathi-amman-temple
பாப்பாத்தி அம்மன் கோயில்: மரமே கோயிலாக விரிந்திருக்கும் மர்மம்; காரிய சித்தி கண்டறிய அதிசயச் சுனை! அந்த பெண் குழந்தைதான் இந்த பாப்பாத்தி அம்மன் எனவும், பனிக்குடம் உடைந்து சென்ற நீர்தான் இங்குத் தீர்த்தக் குளமாக மாறியது என்றும், அறுத்தெறிந்த தொப்புள் கொடி பல கிளைகளாக மாறி இந்த அம்மனுக்கு நிழல் தரும் கோயிலாகவும் மாறியதாகக் கூறுகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டிப்பனூர் என்னும் கிராமத்தில் இயற்கை அழகு நிறைந்த ஒரு மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது பாப்பாத்தி அம்மன் திருக்கோயில். கோயில் என்றால் இங்கு அழகிய கட்டுமானம், கோபுரம் என்று எதுவும் கிடையாது. ஒரு மரமே விரிந்து பரந்து கோயிலாக மாறி இருக்கிறது. இங்குக் கோயிலைக் கட்ட முயன்றாலும் அது முடிவதில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோயில், மண்டபம்,...