தமிழக அஞ்சல் துறையில் வேலை.10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – நவம்பர் 18 நேர்முகத்தேர்வு!
கோவை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறை அலுவலகத்தில் காலியாக இருக்கும் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம். முகவர் பணி தமிழகத்தில் அஞ்சல் அலுவலக துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களில் புதிய ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக கோவை அஞ்சல் கோட்டகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கோவை அஞ்சலக அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீட்டு சேவையில் நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வரும் நவம்பர் 18ம் தேதியன்று நேர்முகத்தேர்வு நடைபெற இருக்கிறது. கல்வித்தகுதி: 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 10ம் வகுப்பு...