Typewriting Institute TTC course technical teachers course petition complaint
அனுப்புநர்: ………. ………. பெறுநர் : மாண்புமிகு தமிழக முதல்வர், முதலமைச்சரின் தனிபிரிவு, தலைமை செயலகம், சென்னை பொருள்: தட்டச்சு தொழில் பயிற்றுனர் தேர்வுக்கான விண்ணப்பத்தின் நிபந்தனைகளை களைவது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு, என் பெயர். நான் பட்டப்படிப்புடன் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை சான்றிதழ் முடித்துவிட்டு கடந்த பல ஆண்டுகளாக தட்டச்சு தொழில் பயிற்றுனர் தேர்வுக்கான விண்ணப்பத்தினை எதிர்நோக்கி காத்து இருந்தேன்.கடந்த ஆகஸ்ட் 6 ந்தேதி அதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது அதில் விண்ணப்பதாரர்க்கு வயது 25 பூர்த்தி ஆகி இருக்கவேண்டும் என்றும் தட்டச்சு பயிலகத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமாறு நிபந்தனைகள் உள்ளன.இதனால் பயிலக உரிமையாளர்கள் தவிர வேறு பொது பிரிவினர் விண்ணப்பிக்க முடியாது...