தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் தக்காளியின் விலை..! விலையை பார்த்து ஷாக்கான இல்லத்தரசிகள்!
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருளான தக்காளியின் விலை அதிகமானதால் இல்லத்தரசிகளுக்கு ஒரு போராட்டமாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளியின் விலை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்ககளாகவே தக்காளியின் விலை அதிகரித்து வந்ததின் விளைவாக ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படது. அதனையடுத்து, சென்னை கோயம்பேடு மார்க்கெடில் 700 டன் தக்காளி இறக்குமதி ஆனதால் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த வாரம் தமிழகத்தில் தொடர்ந்து தக்காளியின் வரத்து அதிகரித்த காரணத்தினால் தக்களியின் விலை சற்று குறைந்துகாணப்பட்டது. அந்த வகையில் தக்காளியின் விலை படி படியாக குறைந்து ஒரு கிலோ தக்காளி 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய...