ரேஷன் அட்டைதாரர்களுக்கான பரிசுத் தொகுப்பு – ஆக.23 முதல் வழங்க ஏற்பாடு!
கேரள மாநிலத்தில் உள்ள வெள்ளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் ஓணம் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசின் ஷரீபில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசு தொகுப்பு:
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையையொட்டி பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக சிறப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பரிசுத்தொகுப்பு குறித்தான அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு கேரளாவில் 86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மஞ்சள் குடும்ப அட்டை பயன்படுத்தும் 5,70,791 பேருக்கு மட்டுமே ஓணம் பரிசு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளை அட்டை பயன்படுத்தும் ரேஷன் அட்டைதாரர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல், கடந்த ஆண்டு ரேஷன் கடைகளின் வாயிலாக ஓணம் பரிசு தொகுப்பாக 17 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 13 பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரிசி, சர்க்கரை, சீனி, ஏலக்காய் ஆகிய நான்கு பொருட்களை தவிர்த்து தேயிலை தூள், சிறு பருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், நெய், முந்திரிப்பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி, துவரம் பருப்பு மற்றும் உப்பு ஆகிய 13 பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் அரிசி தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும் வழங்கப்படவுள்ளது.