
பெரம்பலூர் மாவட்ட கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10ம் வகுப்பு | சம்பளம்: Rs.35,100
பெரம்பலூர் மாவட்டம் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை | 
| வகை | தமிழ்நாடு அரசு வேலை | 
| காலியிடங்கள் | 03 | 
| பணியிடம் | பெரம்பலூர், தமிழ்நாடு | 
| ஆரம்ப தேதி | 07.07.2025 | 
| கடைசி தேதி | 05.08.2025 | 
பணியின் பெயர்: கிராம உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.11,100 முதல் Rs.35,100 வரை
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 10ம் வகுப்பு
இதர தகுதிகள்: விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் இருக்க வேண்டும்.
காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
BC, BC (M), MBC/DNC, SC, SC(A), ST – 21 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி – 21 வயது நிரம்பியவராகவும் 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
இதர வகுப்பினர் – 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- மிதிவண்டி /இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன்
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025
எழுத்து தேர்வு தேதி: 05.09.2025
நேர்காணல் நடைபெறும் தேதி: 20.09.2025 to 26.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://perambalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here | 
| விண்ணப்ப படிவம் | Click here | 
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here | 

![Birth of K Kamaraj – [15th July, 1903] This Day in History](https://startamilexam.com/wp-content/themes/boxstyle/img/thumb-medium.png) 
