தமிழகத்தில் சங்கரன்கோவில் பகுதியில் வரும் ஆகஸ்ட் 6 ம் தேதி மின்தடை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது என்று செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
மின்தடை:
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றவாறு மின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கனரக தொழிற்சாலைகளும், தனியார் தொழில் நிறுவனங்களும் அதிகரித்து வருவதால் நாட்டில் அதிகமான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் விதமாக மத்திய மாநில அரசுகள் இணைந்து மின் உற்பத்தியை பெருக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
மேலும் மக்களும் அதற்கேற்ப மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்வது அவசியமானதாகும். மாநிலம் முழுவதும் தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகம் செய்ய, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி அவசியமாகும். அவ்வாறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு சில மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. மேலும் மின்தடை குறித்த விவரங்கள் முன்னதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் சங்கரன்கோவில் பகுதியில் வருகிற சனிக்கிழமை (ஆகஸ்ட் 6 ம் தேதி) துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம் புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ. சுப்ரமணியபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம்,, பருவக்குடி, பந்தப்புளி, பி.ரெட்டியபட்டி, தெற்கு வெங்காநல்லூர், சோலைச்சேரி, வேலாயுதபுரம், உள்ளிட்ட கிராமங்களில் ஆகஸ்ட் 6ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.