ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – செப்.19 முதல் பரிசு பொருள் வழங்க ஏற்பாடு!
கௌரி கணபதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசு பொருள் வழங்க இருப்பதாக மாநில அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசு பொருள்;
இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா என்கிற திட்டத்தின் மூலமாக பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கௌரி கணபதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 100க்கு 4 ரேஷன் பொருட்கள் அடங்கிய ரேஷன் கிட் வழங்க இருப்பதாக மாநில அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு கிலோ ரவை, கடலை பருப்பு, சர்க்கரை மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய ரேஷன் கிட் தீபாவளி பரிசாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கௌரி கணபதி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 19ம் தேதி முதல் பொதுமக்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக இந்த ரேஷன் கிட்டடை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, தீபாவளி பண்டிகைக்கான ரேஷன் கிட் நவம்பர் 12ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் ஒரு கோடியே 65 லட்சத்து 60 ஆயிரத்து 256 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ. 239 மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் ரூ 100க்கு ரேஷன் கிட்டாக வழங்குவதால் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.