பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு! மிஸ் பண்ணாம படிங்க – Registration Office New Procedure 2024
Registration Office New Procedure 2024
பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவுத்துறை அலுவலகம்:
தமிழகத்தின் பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் அடிக்கடி மக்களின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களின் வரிசைக்கு ஏற்ப டோக்கன் எண் வழங்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படுகிறது.
இந்த வரிசையின் படி பதிவுக்கு செல்லும் நபர்கள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வரிசைப்படுத்துதல் முறையில் குழப்பங்கள் தொடர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரிசையில் காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் எளிதாக தெரியும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்று பத்திரப்பதிவு துறை தெரிவித்திருந்தது.
புதிய நடைமுறையின் படி பத்திரப்பதிவுக்கான டோக்கன் எண், விண்ணப்பதாரர் பெயர் போன்ற விவரங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தும் வகையில் பெரிய திரை வசதி 3.64 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
டோக்கன் எண் தெரிவிக்கப்படும்போது குரல் வழி அறிவிப்பும் ஒலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் சென்னை டி நகர் பதிவு அலுவலகத்தில் நேற்று இந்த புதிய வசதியை தொடங்கி வைத்துள்ளார். பின்னர் பேசும்போது, நடப்பு மாதம் பிப்ரவரி வரையில் பத்திரப்பதிவு துறை மூலமாக ரூபாய் 1812.70 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.