கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் தேர்தல் பல்வேறு தேர்தல் அறிக்கை அறிவிக்கப்பட்டது. அவற்றில், மகளிருக்கு இலவச பேருந்து வசதி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 போன்ற பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளே மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தினார்.
இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்பொழுது வழங்கப்படும் என்று கேள்வி எழுந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பட்ஜெட் கூட்டுத்தொடரில் தமிழக முதல்வர் அறிவித்தார். அந்த கூட்டுத் தொடரில் அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் இந்த உரிமைத் தொகையானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.
இதையடுத்து, மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் மூலம் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ பெண்கள், சிறிய கடைகள் வைத்திருக்கும் பெண்கள், சிறு, குறு வணிகம் செய்யும் பெண்கள் உள்ளிட்டோர் இதில் பயன்பெற முடியும். இது தொடர்பாக நேற்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கான நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.