சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதிய முறையில் நிரப்பிட அரசாணை எண்(நிலை) 95, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை (சந4-2), நாள்:16:12.2024-ன் மூலம் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதவிகள் :
சமையல் உதவியாளர்கள்
காலிப்பணியிடங்கள் :
8997 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி :
10ஆம் வகுப்பு தோல்வி/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டாயம் தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்
வயது வரம்பு :
21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
(ஊதிய நிலை 1 (Level of Pay -ரூ.3000-9000)) ஊதியம் பெறுவர்
தேர்வு செய்யும் முறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : |
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும் விண்ணப்பிக்க இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.