இந்தியாவில் Sim Card விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு – ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் சரியான ஆவணங்கள் பெறாமல் சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சிம் கார்டு விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
சிம் கார்டு விற்பனை:
இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் சிம் கார்டினை சட்டத்திற்கு விரோதமாக வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும், பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைவான விலைக்கு ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாமல் விற்பனை செய்து வருகின்றனர். இது போல, முறையான ஆவணம் இல்லாமல் வாங்கும் சிம் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் வழிப்பறி செய்வது, பணம் கேட்டு மிரட்டுவது போன்ற குற்ற சம்பவங்களுக்கு மோசடி கும்பல் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், கட்டாயமாக சிம்கார்டு விற்பனை செய்யும் போது பொதுமக்களின் அடையாள அட்டை, காவல்துறை அனுமதி மற்றும் பயோமெட்ரிக் ஆகியவற்றை உறுதி செய்திருக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது வரை போலியான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் வாங்கப்பட்ட 52 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, தகுந்த ஆவணங்கள் பெறாமல் மொபைல் எண்களை விற்பனை செய்த 67,000 தொலைத்தொடர்பு டீலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அரசு எச்சரித்துள்ளது.