தமிழகத்தில் பயிலும் அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் அனைத்தும் மாறி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் பயன்பாட்டிற்கு “டேப்லட்” வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த செயல் மூலம் பள்ளி சார்ந்த நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகள் உடனே தெரிவிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டுதான் பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.