தமிழக அரசு பெண் குழந்தைகளின் கல்வி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவற்றிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வாக்கியில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளின் கல்வி, திருமண உதவி போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக அரசு சார்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் மொத்தம் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவின் கீழ் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பத்துக்கு ரூ.50,000 உதவித் தொகை கிடைக்கும். அதேபோல, இரண்டாவது பிரிவின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்துக்கு குழந்தை ஒன்றுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும். பெற்றோரில் இருவரில் ஒருவர் தங்களது 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கபட்டது.
இந்நிலையில் இந்த பாதுகாப்பு திட்டம் குறித்து ஆகஸ்ட் 2023 முதல் ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமைகளில் பாதுகாப்பு திட்ட முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பெண் குழந்தைகள் பயன்பெற முடியும்.