
11ஆம் வகுப்பு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு! ரிசல்ட் பார்ப்பதற்கான லிங்க் – Tamilnadu HSC 11th Exam Result 2024
Tamilnadu HSC 11th Exam Result 2024
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் TNDGE 11ஆம் வகுப்பு அல்லது பிளஸ் 1 தேர்வு முடிவுகளை மே 14ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியிடுகிறது. நீங்கள் உங்களுடைய Result பார்ப்பதற்கான Link இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி முடிவடைந்தது. சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர்.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்:
இந்தநிலையில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியாகிறது. ரிசல்ட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களான dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்.
இணையதளங்களில் மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழைய வேண்டும். மேலும் தேர்வு முடிவுகள் ஆனது மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி?
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். tnresults.nic.in. முகப்புப்பக்கத்தில் ஒளிரும் இடைநிலை தேர்வு முடிவுகளை கிளிக் செய்யவும். உங்கள் ரோல் எண்ணை உள்ளிட்டு தேர்வு பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்கள் மதிப்பெண்கள் காட்டப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TN 11th Standard Result 2024 Link: