தமிழ்நாடு தபால் துறை வேலைவாய்ப்பு – 4300+ பணியிடங்கள்.. தேர்வு இல்லை.. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழகத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக இருக்கும் GDS (Gramin Dak Sevak) பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் கீழ் கிட்டத்தட்ட 4300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் கீழ் கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி தபால் ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலே போதுமானது ஆகும். இந்தப் பணிக்கு 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிபவர்கலாம். மேலும் SC/ ST/OBC/EWS போன்ற பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். இந்த வேலைவாய்ப்புக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST/பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் கட்டணம் செலுத்தப்பட வேண்டியது இல்லை.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியை பொறுத்து ரூ.10000 அல்லது ரூ.12000 சம்பளமாக தரப்படும். 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பிற்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தபால் துறையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேலை தேடுபவர்கள் இந்த அறிவிப்பு வெளியானதும் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.