தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளின் பலன்களை தொடர்ந்து பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆகும். அந்த வகையில் ஆதார் எண் இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.
ஆதார் எண் இணைப்பு:
தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு மூலமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த பலன்களை பெற ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆகும். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 1271 ரேஷன கடைகள் இயங்கி வருகின்றன. அந்த ரேஷன் கடைகளில் சுமார் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் காடுகள் இருக்கின்றன.
இந்த ரேஷன் கார்டுகளில் அரிசி கார்டு 6 லட்சத்து 72 ஆயிரத்து 670 அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் சுமார் 66,235 ஆகும். மேலும் காவலர் கார்டுகள் சுமார் 1,572, சர்க்கரை கார்டு 18181, முதியோர் அரிசி கார்டு 4794, அன்னபூர்னா அரிசி கார்டு 23, பொருள்கள் வேண்டாம் என 1346 கார்டுகள் இருக்கின்றன. இந்த கார்டுகலில் 20 லட்சத்து 81 ஆயிரத்து 780 உறுப்பினர்கள் இருக்கின்றன.
அவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் விரைவில் ஆதார எண்ணை இணைக்க வேண்டும் இல்லையென்றால் கார்டு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.