தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக பணியாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் சீரானபின் அவர் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு காவலில் எடுத்தனர். இவரை வருகிற 12 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இரவு 9 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துவரப்பட்டார். அங்கு வைத்து சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கேள்விகள் கேட்க உள்ளனர். ஒவ்வொரு நாளும் 50 கேள்விகள் வீதம் என மொத்தம் 200 கேள்விகளை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்க உள்ளதாக அமலாக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்