இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியபின் மக்களிடம் அதிகமாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போனது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் சென்று மாற்றி கொள்ளலாம் அல்லது தங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி சில கட்டுபாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ. 20,000 வரை மட்டுமே வங்கியில் மாற்ற முடியும் என்றும் இதற்கான கால அவகாசம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 88 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஜூலை 31ம் தேதி நிலவரப்படி சுமார் 3.14 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.