ஏப்ரல் 1 முதல் அமலாக போகும் புதிய விதிகள்…!! மக்களே உஷார்…!!
ஒரு நிதியாண்டானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 தொடங்கி அடுத்த வருடம் மார்ச் 31 முடிவடைகிறது. இதனை கருத்தில் கொண்டே பட்ஜெட், புதிய வரிகள் மற்றும் விதிகள் அனைத்தும் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடம் அமல்படுத்தப்பட போகும் புதிய விதிகளை குறித்து கீழே விரிவாக காணலாம்.
- பயன்படுத்தப்படாத மொபைல் எண்களுக்கான UPI பரிவர்த்தனைகள் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
- நிலையான வைப்புத்தொகை (FD), தொடர்வைப்பு திட்டம் (RD) மற்றும் பிற சேமிப்பு திட்டங்களில் இருந்து பெறப்படும் வட்டி வருமானத்தின் வரி விலக்கு (TDS) உயர்த்தப்பட்டுள்ளது. இது நிதிச்சுமையை குறைத்து, முதலீட்டாளர்களுக்கு பயன் அளிக்கிறது.
- நிலையான வைப்பு திட்டங்கள் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் அமலாகிறது.
- இதுவரை பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கத்தவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. எனவே இச்செயலை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
- ஏப்ரல் 1 முதல் டிமேட் மற்றும் ம்யூச்சுவல் பண்ட்க்களுக்கான கடுமையான KYC சரிபார்ப்பு விதிகள் அமலாக உள்ளது.