தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நியாய விலை கடை என்று சொல்லப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இந்த பொருட்களை வாங்க ஒவ்வொரு குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் பாமாயில் எண்ணெய் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும் என்பதால்… ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மத்திய வேளாண் இணை அமைச்சர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் முதற்கட்டமாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும் எனவும், பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.