வெளியீடு! Result பார்ப்பதற்கான லிங்க் இதோ || TN 11th Result 2025
TN 11th Result 2025
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 2.00 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளம், குறுஞ்செய்தி, ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் பார்க்கலாம். Result பார்ப்பதற்கான Link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளிகளில் 2024-25 ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை மார்ச் முதல் ஏப்ரல் வரை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தியது. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர்.
11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் :
இந்நிலையில், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று 2 மணிக்கு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.
மேலும், எஸ்.எம்.எஸ் (sms) மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in , http://www.dge.tn.gov.in என்ற இணையதளங்களின் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.
11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியத்தின் (TNBSE) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://dge.tn.gov.in/result.html அல்லது https://tnresults.nic.in/
படி 2: “TN Board Exam Results 2025” என்று உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: வழங்கப்பட்ட விருப்பங்களிலிருந்து தொடர்புடைய தேர்வைத் தேர்ந்தெடுக்கவும், அதாவது 11 ஆம் வகுப்பு.
படி 4: இப்போது உங்கள் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 5: “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 6: முடிவு திரையில் காட்டப்படும்.
படி 7: முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கவும்.
படி 8: பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
மேலும், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம்.
