தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசின் புதிய வியூகம்!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசின் புதிய வியூகம்!

 

tn government announcement-l about pongal gift 2022

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்க இருக்கும் மளிகை பொருட்களின் டெண்டர் நடவடிக்கை குறித்த முக்கிய விவரங்களின் தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் ஜனவரி மாதம் வர இருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக பொங்கல் வைக்க தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகிய பொருட்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனுடன் கடந்த சில வருடங்களாக ரொக்கப்பணம் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை ரொக்கப்பணத்திற்கு பதிலாக பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற 20 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கரும்பும் வழங்கப்பட உள்ளது. இதற்கான சாகுபடிக்காக ரூ.71 கோடியும், 20 மளிகை பொருட்களுக்கு ரூ.1088 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகத்தில் மொத்தம் 2,15, 48,060 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த போது, கொரோனா கால நிவாரண உதவியாக தமிழக அரசு ரூ.4,000 நிவாரண தொகையுடன், 14 சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை இலவசமாக வழங்கியது. இந்த சமையல் பொருட்கள் அனைத்தையும் ஒரே முறையில் கொள்முதல் செய்யும் போது, அவற்றில் எந்த பொருளுக்கு ஜிஎஸ்டி அதிகமாக உள்ளதோ, அதே விலையில் அனைத்து பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படும்

tn government announcement-l about pongal gift 2022

ஆனால் கோதுமை மாவு, கடலைப்பருப்பு, ரவை, உப்பு, புளி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி கிடையாது. இதனால் தனித்தனியாக கொள்முதல் செய்யும் போது அரசுக்கு அதிக அளவிலான பணம் மிச்சப்படுத்தப்படும். கடந்த முறை மொத்தமாக அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டதால் ஒரு நிவாரணப்பைக்கு கூடுதலாக ரூ.42 செலவழிக்கப்ட்டுள்ளது. அப்போது, கடந்த முறை அரசு ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலம் மட்டுமே ஆகியிருந்தது. மேலும், மக்கள் கொரோனா கால ஊரடங்கினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

tn government announcement-l about pongal gift 2022

இதனால் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று அவரசமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இம்முறை முதல்வர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே திட்டத்தை அறிவித்து அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதனால் பொங்கல் பரிசு அரசு தொடர்பான நடவடிக்கைகள் துரிதகமாக செய்யப்பட்டு வருகிறது. பொருட்களுக்கான டெண்டர் முறையாக வழங்கப்பட்டு, பொருட்களை குறைவான விலையில் நிறைவான தரத்தில் வாங்குவது குறித்து ஆராய்ந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளனர்.

 

startamilexam.com

Mhttp://Myexam100.com

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *