தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை (RTE) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல் சீருடை, பாடப்புத்தகம் உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில் வரக்கூடிய 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில், ஏப்ரல் 22 முதல் மே 20ஆம் தேதி வரையிலும் விநியோகம் செய்ய உள்ளனர். தகுதியானவர்கள் rte.tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.