தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை || முதல்வர் அதிரடி உத்தரவு
TN School and Colleges Leave Tomorrow: வடகிழக்கு பருவமழை தொங்கியுள்ள சூழ்நிலையில் சென்னையில் வரும் அக்டோபர் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர், நெல்லை, தூத்துக்குடி. கள்ளக்குறிச்சி உள்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை:
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்த நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை காரணமாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
4 மாவட்டங்களில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு நாளை கனமழை பெய்யும் என்று விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் நாளை மழையில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது.
வானிலை மையம் எச்சரிக்கை:
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடங்கி உள்ளது. சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். அக்.15,16-ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளுடன் அரசு தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.