தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10th, 11th, 12th பொதுத்தேர்வு டைம் டேபிள் இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியீடு || தேர்வு விவரங்கள் இதோ

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10th, 11th, 12th பொதுத்தேர்வு டைம் டேபிள் இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியீடு || தேர்வு விவரங்கள் இதோ

TN School Public Exam Time Table 2025: தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை கல்வித்துறை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அதன்படி, தமிழக பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல், 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி 21- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத்தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதன் அட்டவணை கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை:

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் விவரம்

03.03.2025 – திங்கள்கிழமை – தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்

06.03.2025 – வியாழக்கிழமை – ஆங்கிலம்

11.03.2025 – செவ்வாய்க்கிழமை – கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)

14.03.2025 – வெள்ளிக்கிழமை – கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

18.03.2025 – செவ்வாய்க்கிழமை – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

21.03.2025 – வெள்ளிக்கிழமை  – வேதியியல், கணக்கு, புவியியல்

25.03.2025 – செவ்வாய்க்கிழமை – இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள்.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் விவரம்

05.03.2025 – புதன்கிழமை – தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்

10.03.2025 – திங்கள்கிழமை – ஆங்கிலம்

13.03.2025 – வியாழக்கிழமை – கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

17.03.2025 – திங்கள்கிழமை  – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

20.03.2025 – வியாழக்கிழமை – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

24.03.2025 – திங்கள்கிழமை – கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)

27.03.2025 – வியாழக்கிழமை – வேதியியல், கணக்கு, புவியியல்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை:

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத்தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் விவரம்

28 .03.2025 – வெள்ளிக்கிழமை – தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்

02.04.2025 – புதன்கிழமை – ஆங்கிலம்

04.04.2025 – வெள்ளிக்கிழமை – விருப்ப மொழிப் பாடம்

07.04.2025 – திங்கள்கிழமை – கணிதம்

11.04.2024 – வெள்ளிக்கிழமை – அறிவியல்

15.04.2025 – வியாழக்கிழமை – சமூக அறிவியல்.

Time Table PDF  :

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *