தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு டைம் டேபிள் வெளியீடு! தேர்வு விவரங்கள் இதோ

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு டைம் டேபிள் வெளியீடு! தேர்வு விவரங்கள் இதோ

TN School Students Quarterly Exam Time Table: தமிழக பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, முழு ஆண்டு தேர்வு என மூன்று பெரும் முக்கிய தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வுகளுக்கு பின் மாணவர்களுக்கு விடுமுறையும் அதன்படி எந்த ஆண்டு காலாண்டு தேர்வு எப்போது நடத்தப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு டைம்டேபிள் ஆனது பள்ளிக்கல்வித்துறையால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் நேரம் ஆகியவற்றின் விவரங்களை முழுமையாக இந்த பதிவில் விளக்கமாக காண்போம்.

6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு அட்டவணை:

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 30 மணி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.

  • 20.09.2024: மொழிப்பாடம்
  • 21.09.2024: விருப்ப மொழி
  • 23.09.2024: ஆங்கிலம்
  • 24.09.2024: உடற்கல்வி
  • 25.09.2024: கணிதம்
  • 26.09.2024: அறிவியல்
  • 27.09.2024: சமூக அறிவியல்

9ஆம் மற்றும் 10ஆம்வகுப்புக்கான தேர்வு அட்டவணை

ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. என்ன மாணவர்களுக்கு பிற்பகல் 1:15 மணி முதல் 4.30 மணி வரை இந்த காலாண்டு தேர்வுகள் நடைபெறும்.

  • 20.09.2024: மொழிப்பாடம்
  • 21.09.2024: ஆங்கிலம்
  • 23.09.2024: கணிதம்
  • 24.09.2024: 9ம் வகுப்பிற்கு உடற்கல்வி, 10ம் வகுப்பிற்கு விருப்ப மொழி
  • 25.09.2024: அறிவியல்
  • 26.09.2024: 9ம் வகுப்பிற்கு விருப்ப மொழி
  • 27.09.2024: சமூக அறிவியல்

11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எந்த மாணவர்களுக்கு தேர்வானது பிற்பகல் 1:15 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

  • 20.09.2024: மொழிப்பாடம்
  • 21.09.2024: ஆங்கிலம்
  • 23.09.2024: 11ம் வகுப்பிற்கு இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள்; 12ம் வகுப்பிற்கு கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது)
  • 24.09.2024: 11ம் வகுப்பிற்கு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை இன்ஜினியரிங் பாடங்கள்; 12ம் வகுப்பிற்கு இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள்
  • 25.09.2024: 11ம் வகுப்பிற்கு வேதியியல், கணக்கியல், புவியியல்; 12ம் வகுப்பிற்கு தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட தமிழ், அரசியல் அறிவியல்
  • 26.09.2024: 11ம் வகுப்பிற்கு தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், அரசியல் அறிவியல்; 12ம் வகுப்பிற்கு வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல்
  • 27.09.2024: 11ம் வகுப்பிற்கு கணிதம், விலங்கியல்; 12ம் வகுப்பிற்கு வேதியியல், கணக்கியல், புவியியல்

இந்த தேர்வு அட்டவணைகளை பார்த்து மாணவர்கள் காலாண்டு தேர்வுக்கு தங்களை நன்கு தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதன் காரணமாக முழு ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களை மாணவர்களால் எடுக்க இயலும். எனவே மாணவர்களே நல்ல முறையில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *