TN TRB இடைநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 – 1760+ காலியிடங்கள் || அதிகாரப்பூர்வ வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TN TRB) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 2024 ஆம் ஆண்டுக்கென நடைபெறவுள்ள TN TRB SGT தேர்வுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் (SGT) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1768  காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 14.02.2024 அன்று முதல் இணையவழி வாயிலாக பெறப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறவும்.

நிறுவனம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)
பணியின் பெயர் இடைநிலை ஆசிரியர் (SGT)
பணியிடங்கள் 1768 (தோராயமாக)
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

 

TN TRB SGT 2024 காலியிடங்கள்:

TN TRB SGT 2024 தேர்வுக்கென மொத்தமாக 1768 (தோராயமாக) பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN TRB SGT 2024 கல்வி தகுதி:

இடைநிலை ஆசிரியர் பணிக்கான இத்தேர்வில் அரசு அல்லது UGC அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு + Diploma / B.EL.Ed, Graduate Degree + B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

TN TRB SGT 2024 வயது வரம்பு:
  • இந்த TN TRB SGT 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2024 அன்றைய நாளின் படி, 53 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST / BCM / BC / MBC / DNC / DW பிரிவினை சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

 

TN TRB SGT 2024 மாத ஊதியம்:

இத்தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் Level 10 படி, ரூ.20,600/- முதல் ரூ.75,900/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

TN TRB SGT 2024 தேர்வு நடைபெறும் விதம்:
  • Compulsory Tamil Language Eligibility Test
  • Written Examination
  • Certificate Verification
  • மேலும் TN TRB SGT 2024 எழுத்து தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB SGT 2024 விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / உடல் ஊனமுற்றவர்கள் – ரூ.300/-
  • மற்ற நபர்கள் – ரூ.600/-
TN TRB SGT 2024 விண்ணப்பிக்கும் விதம்:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 14.02.2024 அன்று முதல் 15.03.2024 அன்று வரை https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Short Notification PDF

Download Notification PDF

Online Application Link

 

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *