TNFUSRC தமிழ்நாடு வனத்துறையில் 1100+ பணியிடங்கள் – வெளியான சூப்பர் அறிவிப்பு!

tnfusrc-recruitment-1161-vacanies-notification-soon

tnfusrc-recruitment-1161-vacanies-notification-soon

TNFUSRC தமிழ்நாடு வனத்துறையில் 1100+ பணியிடங்கள் – வெளியான சூப்பர் அறிவிப்பு!
tnfusrc-recruitment-1161-vacanies-notification-soon

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வனத்துறை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு வனத்துறை பணிகள் உட்பட சீருடை வனப்பணியாளர் பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீருடை வனப்பணியாளர்

தமிழ்நாடு வனத் துறையில் வனக்காவலர், வனக்காப்பாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்கள் தமிழ்நாடு சீருடை வனப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றனர். இப்பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் காத்திருந்த நிலையில், தற்போது இது தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்று சென்னை தலைமை செயலகத்தில் வனத்துறை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, சீருடை வனப்பணியாளர் பணியிடத்தில் காலியாக இருக்கும் 1161 பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை வனப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNFUSRC) விரைவில் தேர்வு நடத்தி தகுதியான நபர்கள் மூலமாக நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

அதன்படி சீருடை வனப்பணியாளருக்கான தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் தமிழ்நாடு சீருடை வனப்பணியாளர் தேர்வாணையத்தால் (TNFUSRC) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Forester பணியிடத்திற்கு இளங்கலை பட்டமும், Forest Guard பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், Forest Watcher பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *