TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் மொழியில் தகுதி குறித்த விபரங்கள்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் TNPSC போட்டித் தேர்வுக்கு தமிழ் வழியில் கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிப்போருக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
TNPSC தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம், 2016 பிரிவு 21-ன் படி எவரும், மாநிலத்தின் ஆட்சி மொழியில், அதாவது தமிழில் போதுமான அறிவு கொண்டிருந்தாலன்றி நேரடி நியமனத்தின் மூலமாக எந்த பணியிலும் பணியமர்த்தப்படுவதற்கு தகுதியுடையவர் அல்ல என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், எந்த பணியிடத்திற்கு நியமனம் நடைபெற இருக்கிறதோ, அந்தப் பணியிடத்திற்கு பணி நியமனம் செய்ய, பிற வகைகளில் தகுதியுடையவராக இருக்கும் ஒருவர், அப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது, போதுமான தமிழறிவு கொண்டிருக்கவில்லையென்றாலும் அவர் அந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தெரிவு செய்யப்பட்டு, பணியமர்த்தம் செய்யப்பட்டால், பணிநியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வாணையத்தினால் நடத்தப்பெறும் இரண்டாம்வகுப்பு மொழித் தேர்வில் (முழுத்தேர்வு) தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவறினால், பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்.
TNPSC Coaching Center Join Now
இத்தகுதியை பெற்றிருக்கும் ஒருவர் தமிழில் போதிய தகுதியுடையவராக கருதப்படுவர். ஒரு பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதியாகவும் அதற்கு மேலும் இருந்தால், பள்ளியிறுதிப் பொதுத்தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி) அல்லது அதற்கு சமமான தேர்வு / மேல்நிலை வகுப்பு (பன்னிரெண்டாம் வகுப்பு) / பட்டப்படிப்பு /அதற்கும் மேற்பட்ட கல்வித்தகுதிகளில் தமிழை ஒரு மொழிப்பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு பள்ளியிறுதிப் பொதுத்தேர்வை அல்லது அதற்கு இணையான தேர்வினைத் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தேர்வாணையத்தினால் நடத்தப்பெறும் இரண்டாம்வகுப்பு மொழித் தேர்வில் (முழுத்தேர்வு) தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சில பதவிகளுக்கான தெரிவு மற்றும் பணி நியமனத்திற்கு, குறிப்பிட்ட நிலையில் தமிழறிவு கட்டாயம் என சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகளில், விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட்ட தமிழறிவினை பெற்றிருந்தால் மட்டுமே தெரிவிற்கு தகுதியுடையவராவார்