தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அடுத்த ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு அட்டவணை 2022 மற்றும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வுகளுக்கான தேதியினை இன்னும் சிறிது நேரத்தில் வெளியிட உள்ளது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்படும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் நமது பக்கத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.
TNPSC Live Updates:
தமிழக அரசுத்துறைகளில் லட்சக்கணக்கில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனை முழுவதுமாக நிரப்புவதற்கு போட்டித்தேர்வுகளை நடத்த அரசிடம் போதிய நிதி இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏராளமான காலியிடங்களின் காரணமாக ஏற்கனவே பணியில் உள்ளோருக்கு சுமை அதிகரிக்கிறது. இதனால் விரைந்து நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தேர்வுகளை விரைந்து நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்…
tnpsc annual planeer 2022 press meet live updates intamil
- 11.25 – அறிவிப்பு வெளியானதில் இருந்து 75 நாட்கள் கழித்து தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11.24 – குரூப் 2 உடன் சேர்த்து 2A பணிகளுக்கும் மொத்தமாக 5831 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளது.
- 11.20 – குரூப் 2 தேர்வுகளுக்கு மொத்தம் 5821 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப் 4 தேர்வுகளுக்கு மொத்தம் 5225 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11.15 – 2022ம் ஆண்டில் 22 வகையான தேர்வுகளை நடத்த TNPSC திட்டமிட்டுள்ளது.
- 11.10 – 2022ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வுகளும் நடைபெறவுள்ளது.
tnpsc annual planeer 2022 press meet live updates intamil
- 11.00 – TNPSC ஆலோசானை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. தற்போது கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளத
- Startamilexam.com