டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது – டவுன்லோட் செய்யும் முறை இதோ!
TNPSC Group 2 Hall Ticket Released: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி TNPSC ஆனது உதவியாளர், வருவாய் கோட்டாசியர், வட்டாச்சியர், துணை ஆட்சியர், நகராட்சி ஆணையர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதன்மை அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்க்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு:
அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்க்கான அறிவிப்பு வெளியானது. Assistant Inspector, Deputy Commercial Tax Officer, Junior Employment Officer (Non-Differently Abled), Probation Officer, Sub Registrar, Grade-II, Special Assistant, Special Branch Assistant உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய குரூப் 2 தேர்விற்கு தேர்வு எழுத சுமார் 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்திருந்த நிலையில் தேர்விற்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியிடப்படும் என்ற ஏதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்து வந்தது. இந்நிலையில் குரூப் 2 தேர்விற்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது.
TNPSC ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். TNPSC Group 2 ஹால் டிக்கெட் 2024 என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உள் நுழைய வேண்டும்.
இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும். TNPSC குரூப் 2 அட்மிட் கார்டு 2024 என்ற பக்கத்தில் உள்ள ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
TNPSC Group 2 Hall Ticket Download Link: Download