TNPSC Group 4 Notification 2021 TNPSC Group 4 group 2 Group 2A Notification 2021 Exam Update 2021

  • TNPSC குரூப் 2, 2A & குரூப் 4 VAO தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – செப்.22 ஆலோசனை கூட்டம்!

 

TNPSC Group 4 Notification 2021 TNPSC Group 4 Group 2 Group 2A Notification 2021 Exam Update 2021

 

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதான TNPSC போட்டித்தேர்வுகளை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (செப் 22) நடைபெற இருப்பதாகவும், அதற்கு பின்னதாக தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

TNPSC தேர்வுகள்

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று சூழல் நிலவி வருகிறது. அதனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட வேண்டிய அனைத்து வகையான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதில் குறிப்பாக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளும் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான TNPSC போட்டித் தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 42 தேர்வுகள் நடத்தப்பட இருந்தது.

TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!

ஆனால் கொரோனா 2 ஆம் அலை காரணமாக 38 தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது நோய்த்தொற்று குறைந்திருக்கும் சூழலில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2(A), குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் தொடர்புடைய அறிவிப்புகள் நாளை (செப்டம்பர் 22) வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

செப்.25 வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!

இது தொடர்பாக TNPSC செயலர் பி. உமா மகேஸ்வரி கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள TNPSC போட்டித்தேர்வுகள் 2021 ஆம் ஆண்டின் தேர்வுகால அட்டவணையில் இடம்பெற்றுள்ளபடி நடத்தப்பட உள்ளது. TNPSC தேர்வுகள் அனைத்திலும் தமிழ்மொழி பாடம் கட்டாயமாக்கப்படும். இது தொடர்பாக நாளை நடைபெற உள்ள தேர்வாணையக் கூட்டத்தில் போட்டித்தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. தொடர்ந்து தேர்வுகள் குறித்ததான அரசாணை விரைவில் வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.

 

 

Office website link

  1. http://Startamilexam.com

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *