TNPSC group 4 notification vacancy exam date official update 2021 TNPSC official announcement annual plan 2021

TNPSC குரூப் 4 VAO அறிவிப்பு 2021 – இம்மாதம் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் இந்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பல்வேறு தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், அக்டோபர் மாதம் குரூப் 4 VAO தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவர உள்ளதால் தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை ஆகிய விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC குரூப் 4 பணியிட விவரங்கள்:

TNPSC குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  1. Download All TNPSC Exam Notification
கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுவது குறிப்பட்ட தக்கது.

TNPSC வயது வரம்பு:

VAO பதவி – பொதுபிரிவினருக்கு 21- 30 மற்றும் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகைகள் உள்ளது. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பணிகளில் – பொதுப் பிரிவினருக்கு 18 – 30 வரையும் மற்றும் பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரையும் சலுகைகள் உண்டு. இதில் குறிப்பாக 12ம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

Tamilnadu’s Best TNPSC Coaching Center

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பதவி கொடுக்கப்படும். இதில் எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 300 மதிப்பெண்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்களுடன் 2 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்படும். தேர்வர்கள் அவர்களுக்கான மொழியை தேர்வு செய்து தமிழ் அல்லது ஆங்கிலம் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இவை அனைத்தும் பொது அறிவை சார்ந்ததாக இருக்கும். குறிப்பாக 75 பொது அறிவு வினாக்களுடன், 25 திறனறி தேர்வுகள் அனைத்தும் அப்ஜக்டிவ் வகையில் கேட்கப்படும்.

TNPSC குரூப் 4 விண்ணப்பிக்க கட்டணம்:
  • பதிவு கட்டணம் – ரூ.150/-
  • தேர்வு கட்டணம் – ரூ.150/-
TNPSC ஊதிய விவரம்:

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,500 – 62,000 / – வரை ஊதியம் வாங்கப்பட உள்ளது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய அறிவுரைகள் :
  • நடைமுறையில் இருந்து வரும் One Time Registration ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • பதிவு விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் போன்றவை தெளிவாக இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும்.
  • பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாம்‌ பாலின (பெண்கள்‌) விண்ணப்பதாரர்‌கள் பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, அவர்கள்‌ மீதமுள்ள 70% காலிப்பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டில்‌, ஆண்கள்‌ , மூன்றாம்‌ பாலினத்தவர்கள்‌ , மூன்றாம்‌ பாலின (ஆண்கள்‌) விண்ணப்பதாரருடன்‌ சேர்ந்து போட்டியிடத்‌ தகுதியானவர்கள்‌.
  • பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் போதுமான விண்ணப்பதாரர் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களில் ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலின (ஆண்கள் ) நிரப்பப்படலாம்.
  • ஆண் விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை உடையவராக இருக்க கூடாது.
  • பெண் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம் செய்தவராக இருத்தல் கூடாது.
  • பணிக்கு விண்ணப்பிக்கும் போது போதுமான தமிழறிவு இல்லாதவராக இருந்தாலும், பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இரண்டாம் வகுப்பு மொழித்தேர்வில் தமிழில் முழுத்தேர்வு பெற்றிருக்க வேண்டும், தவறினால் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
  • தேர்வாணையத்தின் தலைவர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் போன்றவர்களின் அதிகாரம் அல்லது செல்வாக்கை பயன்படுத்தினால் அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை செய்யப்படுவார்கள்.
  • இடஒதுக்கீட்டிற்க்கான சான்றிதழ், கல்வி சான்றிதழ்களை போலியானதாக சமர்பித்தாலும், அவற்றில் போலியான திருத்தங்களை செய்திருந்தாலும், அவர்கள் மீது நிரந்தரமாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • தேர்வர்கள் தேர்வுக்கு வரும் போது மது அருந்திவிட்டு வந்தாலும், புகை பிடிப்பவர்கள் போன்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது.
  • ஆள்மாறாட்டம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தேர்வு மையத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் தேர்விற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே மூடப்படும். அதன்பிறகு வரும் தேர்வர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *