
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்! படிக்க தவறாதீங்க
TNPSC Group 4 Result Date Latest Info: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்தது.
குரூப் 4 தேர்வில் கூடுதல் பணியிடங்கள்:
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டன. புதிதாக 2208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது குரூப் 4 தேர்வுக்கு மொத்தமாக 8932 காலியிடங்கள் உள்ளன.
குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள்:
முன்னதாக, துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளைபணியாளர் தேர்வாணையம் 50 நாட்களுக்குள் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்த உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 28ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனையடுத்து ஒரு சில தினங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே திட்டமிட்டப்படி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பாப்போம்.
Result Link: