மக்கள் சேவையில் சிறந்த போக்குவரத்துக் கழகங்கள் கடும் நெருக்கடியில்!-கே.ஆறுமுக நயினார்
தமிழகத்தின் மிகப்பெரிய சேவை துறை அரசு போக்குவரத்துக் கழகம். தமிழ கத்தில் இருப்பது போன்ற போக்குவரத்து சேவை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள 17,662 கிராமங்களில் 17,300 கிராமங்களுக்கு பேருந்து வசதி செய் யப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் கிராமப் புற பேருந்து சேவை இல்லை. மலைப்பகுதிக்கும் அதிக பேருந்துகளை இயக்குவது தமிழகத்தில் மட்டும் தான்.
சிறப்பம்சங்கள்:
1. மற்ற மாநிலங்களை விட குறைவான பேருந்துகட்டணம்
2. மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் 24 × 7 (24 மணி நேரமும்) பேருந்து சேவை
3. இழப்பு ஏற்படும் என தெரிந்தே கிராமப்புற மக்களின் சேவைக்காக 10,000 வழித்தடங்களில் பேருந்து இயக்கம்
4. 30 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை
5. மகளிர், மாற்றுத் திறனாளிகள், தீவிர நோயாளிகள் அனைவருக்கும் கட்டணமில்லா சேவை
தமிழகத்தின் கல்வி, தொழில் வளர்ச்சி போன்றவற்றில் மிக முக்கிய பங்கு போக்கு வரத்துக் கழகங்களுக்கு உண்டு. இந்தியாவில் அரசு இயக்கும் 65 போக்குவரத்துக் கழகங்களில் சிறப்பான செயல்பாட்டிற்கான பல விருதுகளை 30 வருடங்களாக தமிழக போக்குவரத்துக் கழகங்கள் பெற்று வருகின்றன.
தொடர் போராட்டம் ஏன்?
போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கத்து டன் இயக்கப்படாமல் சேவைக்காகவே இயக்கப்படுகின்றன என கலைஞர் கருணா நிதி, முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் சட்டமன்றத்தில் பல முறை அறிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் அமைச்சர்க ளால் மானியக் கோரிக்கையின் போது தாக்கல் செய்யப்படும் கொள்கை விளக்க குறிப்பில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் சேவை துறையாக செயல்படும் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு எவ்வித நிதி உதவியும் செய்வதில்லை. பேருந்துகளை இயக்க 1 கி.மீ ரூ.60-ல் இருந்து ரூ.65 வரைக்கும் செலவு ஆகிறது. முழுமையாக பயணிகள் ஏறினாலும் 1 கி.மீட்டருக்கு வருமானம் ரூ.30 மட்டுமே.
சமீபத்தில் தீபாவளியின் போது பேருந்து பற்றாக்குறை என கூறி தனியார் பேருந்துக ளை வாடகைக்கு எடுத்து அரசு இயக்கியது. வாட கையாக 1 கி.மீட்டருக்கு ரூ.51 வழங்கப்பட்டது.
நிதி நெருக்கடியின் தாக்கம்
தற்போது 1 கி.மீட்டர் இயக்க கழகங்களுக்கு ரூ.30 இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை அரசு ஈடுகட்டாததால் போக்குவரத்துக் கழகங்க ளின் தற்போதைய கடன் ரூ.45,000 கோடி. இதில் தொழிலாளர்களின் பணம் ரூ.15,000 கோடி. அரசு உதவி இல்லாத நிலையில் கழகங் கள் வங்கிக் கடன்களையும், தொழிலாளர்களின் சேமிப்பான பி.எஃப்., பணிக்கொடை ஆகிய வற்றையும் செலவு செய்கின்றன. ரூ.100 வருமா னத்தில் ரூ.13 வட்டிக்கே செலவாகிறது.
பாதிக்கப்படும் தொழிலாளர்கள்
G 18 மாதங்களாக ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை (நிலுவைத் தொகை ரூ.3,500 கோடி)
G 93,000 ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு இல்லை (நிலுவைத் தொகை ரூ.2,000 கோடி)
G நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அரசு தேவையற்ற மேல்முறையீடு செய்து காலம் கடத்துகிறது
G 10,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வு பெறாமலேயே மரணமடைந்துள்ளனர்
தற்போதைய நிலை
G 2017-ல் 22,500 பேருந்துகள் இயங்கின; இப்போது 19,500 மட்டுமே.
G 1,40,000 தொழிலாளர்களிலிருந்து இப்போது 1,15,000 பேர் மட்டுமே உள்ளனர்.
G 25,000 காலிப் பணியிடங்கள்.
G வாரிசு வேலை கூட மறுக்கப்படுகிறது.
G இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
G தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் நடவடிக்கை அதிகரிப்பு.
தீர்வுக்கான வழிகள்
1. வரவு-செலவு வித்தியாசத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்
2. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
3. ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
4. தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்
இதற்காக சிஐடியு தலைமையில் டிசம்பர் 12 அன்று சென்னையில் மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமையில் பெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க தமிழக மக்களும் குரல் எழுப்ப வேண்டும்.
கே.ஆறுமுக நயினார்
பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)