தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத காரணத்தினால் தக்காளியின் வரத்து குறைந்தது. தக்காளியின் வரத்து குறைந்து காணப்பட்டதால் தக்காளியின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மழை பொழிவு சரிவர இல்லாததால் தக்காளி மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகாமானது. இந்நிலையில், தற்பொழுது சென்னை வானிலை மையம் ஓரிரு இடங்களில் மழை பொழியக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வந்த நிலையில் வெயில் தாக்கம் சிறிதளவு கூட குறையாமல் இருந்தது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த 24 மணி நேர நிலவரப்படி, ‘கோமுகி அணை 7 செ.மீ., சித்தம்பட்டி 6 செ.மீ., தனிமங்கலம், கும்பகோணம், காட்டுமயிலூர், மேட்டுப்பட்டி, தல்லாகுளம், கொடைக்கானல் பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2 முதல் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது