UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு – 761 பேர் நேரடி நியமனம் & டாப் 3 ரேங்க்!
மத்திய அரசு தேர்வாணையம் ஆனது தற்போது சிவில் சேவை பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் இறுதி மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
UPSC CSE தேர்வு முடிவுகள் 2021:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக வருடந்தோறும் சிவில் சேவை நடத்தப்படும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள பணியிடங்களுகளை நிரப்பிட இந்த தேர்வு நடத்தப்படும்.
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு முதற்கட்ட (Prelims), முதன்மை (Mains) தேர்வுகள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கு பதிவு செய்தவர்களுக்கான முதற்கட்ட தேர்வுகள் கடந்த அக்டோபர் 2020ம் ஆண்டு நடைபெற்றது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வுகள் இந்த 2021ம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 17 வரை நடத்தப்பட்டது. இந்த இரண்டு தேர்விலும் தேர்ச்சி அடைந்தோர் அடுத்தபடியாக நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்பட்டனர். இந்த நேர்காணல் ஆனது சமீபத்தில் ஆகஸ்ட் 2 முதல் செப்டம்பர் 22 வரை நடைபெற்றது. இந்த மூன்று தேர்வுகளிலும் பெற்ற மொத மதிப்பெண்களின் தற்போது இறுதி மெரிட் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இத்தேர்வுகளின் மூலம் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பொதுப் பிரிவின் கீழ் 263 பேர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பிரிவின் கீழ் 86 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஓபிசி பிரிவில் 229 பேரும், எஸ்சி பிரிவில் 122 பேரும் எஸ்டி பிரிவில் 61 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் முதலிடத்தை சுபம் குமார் பெற்றுள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை முறையே ஜக்ரதி அவஸ்தி மற்றும் அங்கிதா ஜெயின் பெற்றுள்ளனர். தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.